முகப்பு
தமிழ்நாடு

திருப்பூரில் எஸ்டியூ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் எஸ்டியூ(சுதந்திர தொழிலாளர் யூனியன்) சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:

மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் எஸ்டியூ(சுதந்திர தொழிலாளர் யூனியன்) சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தொழிலாளர் அமைப்பான எஸ்டியூ சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பக்கீர் முகமது பாபு தலைமை வகித்தார். 

இதில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கலை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் தாஹிர் அலி, மாநிலத் துணைத் தலைவர் மார்க்கெட் ஜெயிலாபுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →