தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,438 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 12 பேர் பலி

DIN


தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 1,438 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்களை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாக வெளியிட்டார். 

அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,438 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,405. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 33.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,116 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்று மேலும் 12 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 861 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 15,762 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 12,697 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 15,692 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 5,60,673 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 74 (அரசு 44 + தனியார் 30) பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து 6 ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய தினம் அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT