முகப்பு
தமிழ்நாடு

ஜெ.அன்பழகன் உடல்நிலை: மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு 

கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். 

Updated On : 6 ஜூன், 2020 at 3:47 PM
பகிர்:

கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். 

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வாகவும் உள்ள ஜெ.அன்பழகன், கடந்த செவ்வாய்க்கிழமை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், 67% மட்டுமே இன்று தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். 

Advertisement

தொடர்ந்து ஜெ.அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மு.க.ஸ்டாலினுடன் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.