சிதம்பரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவாரணப் பொருள்களை வழங்குகின்றனர் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் பி.வி.சுரேந்திரஷா 
தமிழ்நாடு

சிதம்பரத்தில் பாஜக சார்பில் 500 பேருக்கு நிவாரண உதவி

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

DIN

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பெருமாள் தெருவில் பாரதிய ஜனதா கட்சி பொறியாளர் அணி சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு 500 பேருக்கு அரிசி, காய்கறிகள், உள்ளிட்ட பொருள்கள் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குப் பொறியாளர் அணி பாஜக மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன், நகராட்சி ஆணையர் பி.வி.சுரேந்திரஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் இளங்குமரன், அஸ்வின், தீபிகா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT