தமிழ்நாடு

திருத்துறைப்பூண்டி அருகே இடி தாக்கியதில் ஒருவர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இடி தாக்கியதில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக்..

DIN

திருத்துறைப்பூண்டி அருகே செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இடி தாக்கியதில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருத்துறைப்பூண்டி அருகே வாளமாபுரம், மானாவாரி தெருவில் உள்ள செங்கல் சூளையில் புகழேந்தி (40) அவரது மனைவி பெரியநாயகி(35) உறவினர் அரவிந்த் (28 )ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனையடுத்து செங்கல் தயாரிக்க தயார் செய்த மண் கல் கரைந்துவிடாமல் இருக்கு கல் அடுக்கிவைக்கப்பட்ட கொட்டகை மீது ஏறி புகழேந்தி தார்பாய்  வைத்து மூடிக்கொண்டிருந்தபோது அவரது மனைவி பெரியநாயகி, உறவினர் அரவிந்த் ஆகியோர் அவருக்கு உதவி செய்துகொண்டிருந்தனர்.  

அப்போது புகழேந்தி மீது இடிதாக்கியதில் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த பெரியநாயகி, அரவிந்த் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT