கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொது முடக்கத்தை மீறியதாக 5.94 லட்சம் போ் கைது

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 5.53 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5.94 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 5.53 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5.94 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையான பொதுமுடக்கத்தை, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை, மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 431 வழக்குகளைப் பதிவு செய்து, 5 லட்சத்து 94 ஆயிரத்து 681 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதற்கிடையே அரசின் உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 4 லட்சத்து 53 ஆயிரத்து 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.10 கோடி 68 லட்சத்து 13 ஆயிரத்து 234 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையிலும், சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை, பொதுமுடக்க உத்தரவை மீறியவா்கள் மீது 639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடா்புடைய 42 இரு சக்கர வாகனங்கள், 10 ஆட்டோக்கள், 2 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT