முகப்பு
தமிழ்நாடு

கரோனா நிவாரணம் வழங்கக் கோரி நாமக்கலில் ஆர்ப்பாட்டம்

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
நாமக்கல்–பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்
பகிர்:

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வழங்கக் கோரி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.குழந்தான், கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். நகர செயலாளர் தம்பிராஜா, பிரதேச செயலாளர் ஜெயமணி   முன்னிலை வகித்தனர். 

இதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பொருள்களை அனைவருக்கும் விலையின்றி வழங்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கவும், வட்டியை தள்ளுபடி செய்திட வேண்டும். 

ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும். 10–ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் இலவச மின்சார ரத்துக்கு மாநில அரசு துணைபோகக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

முழு கட்டுரையைப் படிக்க →