கரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை: சு. திருநாவுக்கரசர்
திருச்சி மாவட்டத்தில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்களை திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்களை திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தியது மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு நிதியை நிறுத்துகிறார்கள் என்றால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கரோனா தொடரும் என்கிறதா மத்திய அரசு?
எம்பிக்களுக்கு நிதி இல்லை எனில் தொகுதியை எப்படி மேம்படுத்துவது, மக்களுக்கு எப்படி உதவுவது எனவே மத்திய அரசு இதனைப் பரிசீலனை செய்ய வேண்டும். கரோனா பாதிக்கப்பட்ட அனைவரின் மருத்துவச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். கரோனா பாதிப்படைந்து தனியார் மருத்துவமனையில் மக்கள் சிகிச்சை பெற்றாலும், அரசு அவர்களின் மருத்துவச் செலவை முழுவதுமாக ஏற்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் கட்டணம் உள்ளிட்டவை மக்களை மேலும் கஷ்டப்படுத்தும் அரசின் நடவடிக்கையாக உள்ளது. மின்கட்டணங்களை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மக்களின் நிலை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். அரசின் கடமை உத்தரவு போடுவது மட்டுமல்ல மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதும் தான். சாதாரண மனிதர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அரசு என்ன சொல்கிறதோ அதைக் கேட்க வேண்டும்.
கரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. கரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்பது உண்மைதான். இதைத் தான் வரதராஜன் கூறினார். அவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. என் மீது வழக்குப் போட்டாலும் போடட்டும் எனக் கூறினார்.