கடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்து வந்த நபரால் பரபரப்பு
கோவையில் கடித்த பாம்பை மருத்துவமனைக்கு பையில் எடுத்துவந்த நபரால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடுகடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்து வந்த நபரால் பரபரப்பு
கோவையில் கடித்த பாம்பை மருத்துவமனைக்கு பையில் எடுத்துவந்த நபரால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் கடித்த பாம்பை மருத்துவமனைக்கு பையில் எடுத்துவந்த நபரால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கணபதியைச் சேர்ந்தவர் முகேஷ்(28). வியாழக்கிழமை நள்ளிரவு இவர் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று கடித்துள்ளது.
இதையடுத்து தன்னை கடித்த பாம்பை அருகிலிருந்த பிளாஸ்டிக் பை ஒன்றில் போட்டுக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு இரவு பணியிலிருந்த மருத்துவர்களிடம் தன்னை பாம்பு கடித்ததாகக் கூறியுள்ளார். எந்த வகையான பாம்பு என மருத்துவர்கள் கேட்டபோது தன்னுடன் எடுத்து வந்திருந்த பையைத் திறந்து காட்டியுள்ளார். அப்போது அதிலிருந்த நாகப்பாம்பு குதித்து வெளியே ஓடியுள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் பதறியடித்துக்கொண்டு வார்டை விட்டு வெளியே ஓடினர். பின்னர் அங்கிருந்த காவலாளிகள் பாம்பை அடித்துக் கொன்று அப்புறப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தால் மருத்துவமனையில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாம்பு கடி பட்ட முகேஷை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.