தமிழ்நாடு

காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்க அரசு நடவடிக்கை தேவை: மூத்த குடிமக்கள் கோரிக்கை

மூத்த குடிமக்கள் வங்கிகள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காத்திருக்கும் நிலையைத் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DIN

மூத்த குடிமக்கள் வங்கிகள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காத்திருக்கும் நிலையைத் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாதவரம், பால்பண்ணை, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வங்கி, தபால் நிலையம், மருத்துவமனை, மருந்தகம் போன்ற இடங்களில் மூத்த குடிமகன்கள் பல்வேறு தேவைகளுக்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மூத்த குடிமகன்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த நிலையில், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் எவ்வித சிரமும் அளிக்காமல் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. வங்கி, தபால் நிலையங்களில் ஓய்வூதியம் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நெடுநேரம் நிலை உள்ளது. கரோனா தொற்று பரவி வரும் நிலையில், முதியோர்களுக்கான ஓய்வூதியம் அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் மாற்று வழி நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னை கொளத்தூரில் ஓய்வூதியம் பெற பல மணி நேரம் வரிசையில் நின்ற முதியவர் மயங்கி விழுந்தார். மருத்துவ பரிசோதனையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT