முகப்பு
தமிழ்நாடு

மருத்துவ வல்லுநர் குழுவுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னையில் கரோனா தொற்று கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மருத்துவ வல்லுநர் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

சென்னை: சென்னையில் கரோனா தொற்று கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மருத்துவ வல்லுநர் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாள்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சென்னையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

இந்தச் சூழலில், பொது முடக்கத்தில் கூடுதலாக கட்டுப்பாடுகளை அரசு அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை முதல்வா் மறுத்தாா்.

மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு நிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். 

தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வழியாக இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ நிபுணா் குழு முன்வைக்கும் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

இதனிடையே , வரும் 17-ஆம் தேதி பிரதமா் மோடியுடன் காணொலி முறையில் முதல்வா் பழனிசாமிஆலோசனை நடத்தவுள்ளாா். கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை பிரதமரிடம் அப்போது முதல்வா் எடுத்துரைக்க உள்ளாா்.
 

முழு கட்டுரையைப் படிக்க →