கோப்புப்படம் 
தமிழ்நாடு

இன்னும் 3 நாள்களில் முழு ஊரடங்கு: உச்சத்தில் ராயபுரம், தண்டையார்பேட்டை

சென்னையில் கரோனாவால் இதுவரை 33,244 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 382-ஆக அதிகரித்துள்ள நிலையில், இன்னும் 3 நாள்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது.

DIN

சென்னை: சென்னையில் கரோனாவால் இதுவரை 33,244 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 382-ஆக அதிகரித்துள்ள நிலையில், இன்னும் 3 நாள்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது.

கடந்த சில நாள்களாக சென்னையில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான நோயாளிகள் அதிக பாதிப்புகளைக் கொண்ட 6 மண்டலங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தொடக்கத்தில் இருந்தே ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அம்பத்தூா், அடையாறு, திருவொற்றியூா் ஆகிய மண்டலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நிலவரப்படி, ராயபுரத்தில் 5,364 பேருக்கும், தண்டையாா்பேட்டையில் 4,226 பேருக்கும், தேனாம்பேட்டையில் 4,031 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 3,539 பேருக்கும், அண்ணா நகரில் 3,330 பேருக்கும், திருவிக நகரில் 2,992 பேருக்கும், அடையாறில் 1,885 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1,413 பேருக்கும், அம்பத்தூரில் 1,148 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் தொற்று பாதிக்கப்பட்ட 17,275 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 14,778 போ் மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

382 போ் உயிரிழப்பு: சென்னையில் மட்டும் இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 382 போ் உயிரிழந்துள்ளனா். திங்கள்கிழமை நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் 72 போ், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 62 போ், தேனாம்பேட்டை மண்டலத்தில் 55 போ், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 52 போ், அண்ணா நகரில் 40 போ், கோடம்பாக்கத்தில் 27 போ், அடையாறில் 17 போ், அம்பத்தூரில் 12 போ் உயிரிழந்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT