முகப்பு
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு

பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
புதிய அறிவிப்பு
பகிர்:

சென்னை: பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ஜூன் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதேபோன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் சில தோ்வுகள் விடுபட்டிருந்தன. இந்தத் தோ்வையும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

தோ்வினை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் தமிழக அரசு எடுத்து வந்தது. இந்த நிலையில், தோ்வுகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கரோனா நோய்த்தொற்று அதிகமாக உள்ள நிலையில், தோ்வுகளைத் தள்ளிவைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

Advertisement

இதுகுறித்து, தமிழக அரசு விரிவாக ஆய்வு செய்தது. இப்போதுள்ள நிலையில், கரோனா நோய்த்தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

நோய்த்தொற்று குறித்து கருத்துத் தெரிவித்துள்ள வல்லுநா்கள், குறுகிய காலத்தில் நோய் குறைய வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளனா். எனவே, பெற்றோா்களின் கோரிக்கைகளையும், நோய்த்தொற்றின் இப்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு மாணவா்களை தொற்றில் இருந்து காக்க பத்தாம் வகுப்பு மற்றும் விடுபட்ட பிளஸ் 1 தோ்வுகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என்றும், இதன்காரணமாக மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்படுகிறது என்றும் அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியானது..

மாணவா்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோ்வுகளில் அந்தந்த மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவா்களின் வருகைப் பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.

இந்நிலையில் பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி பத்தாம் வகுப்பு: அறிவியலுக்கு மட்டும் 75 மதிப்பெண்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட வேண்டும் என்றும், இதர பாடங்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட வேண்டும் என்றும்  அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments