மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்தி வருத்தம்!
மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியது குறித்து...
மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளம், மலப்புரத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தின்போது பேசிய பிரியங்கா காந்தி, “கடந்த டிசம்பர் மாதம் உடல்நலம் சரியில்லாத என் சகோதரியை சந்திக்க துபாய் வழியாக அமெரிக்கா சென்றேன். அதனால், எடையுள்ள இரண்டு பைகளை வைத்திருந்தேன். திடீரென ஒரு விமானநிலைய ஊழியர் என்னருகே வந்து எனக்கு வணக்கம் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
என் பைகளை பாதுகாப்பு சோதனை செய்யும் இடம் வரை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார். அவரிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டேன். அதற்கு அவர் ‘நான் கேரளத்தைச் சார்ந்தவன்’ என்று கூறினார். நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன்.
மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து என் முதல் சிந்தனை, தங்களுடைய உறவினர்களை விட்டு வெளிநாட்டில் தவிக்கும் மக்கள் குறித்துதான். நானும் ஒரு தாயாக இங்குள்ள அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் மனநிலை குறித்து மிகுந்த வருத்தம் கொண்டேன்” என்றார்.
மேலும், ”இந்த சூழ்நிலையை அங்குள்ளவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள்? அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா? அவர்களால் நம்மிடம் திரும்பி வர முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
Congress MP Priyanka Gandhi on Monday (April 6) raised the question: Will Indians in the Middle East return home safely?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.