திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது!
திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று வரை கரோனா பாதிப்பு 1,940 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 66 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,011 பேர் கரோனாவுக்கு பாதிககப்பட்டுள்ளனர்.