தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.36,256

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.36,256-க்கு விற்பனை செய்யப்பட்டது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.36,256-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி, ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து ஏப்ரல் 10-ஆம் தேதி, ரூ.35 ஆயிரத்தையும், 14-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4,532-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து ரூ.52.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.52,900 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 4,532

1 பவுன் தங்கம் ................. 36,256

1 கிராம் வெள்ளி ............... 52.90

1 கிலோ வெள்ளி .............. 52,900

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .......................4,553

1 பவுன் தங்கம் ..................... 36,424

1 கிராம் வெள்ளி .................. 52.80

1 கிலோ வெள்ளி .................52,800.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT