தமிழ்நாடு

தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை: சென்னை போக்குவரத்துக் காவல் துறை அறிவிப்பு

DIN


முழு ஊரடங்கு காலத்தில் தனியார் வாகனங்கள் இயங்க அனுமதியில்லை என்று சென்னை போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது.

சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குள்ட்பட்ட பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து முழு ஊரடங்கு காலத்துக்கு சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 

இதன்படி:

அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து தனியார் வாகனங்கள் இயங்க அனுமதியில்லை.

அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல், வசிக்கும் இடத்தில் 2 கி.மீ தொலைவிற்குள் மட்டும் நடந்து சென்று பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். 

உணவு டெலிவரி செய்பவர்கள், பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து உரிய அடையாள அட்டைகளைப் பெற்று வாகனங்களை இயக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் நிறுவனத்திடமிருந்து உரிய அடையாள அட்டை, அனுமதி சீட்டு மற்றும் உரிய ஆவணங்களைப் பெற்று இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

காவல் துறையின் முழுமையான வழிகாட்டுதல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT