தமிழ்நாடு

ஊர்ப் பெயர்கள் மாற்றம் அரசாணை வாபஸ்

DIN


தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதுவது பற்றி வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அறிவுறுத்தி தமிழக அரசு கடந்த 11-ஆம் தேதி அரசாணை பிறப்பித்திருந்தது. ஆனால், பல்வேறு ஊர்களின் பெயர் மாற்றத்துக்கு மக்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியது. 

இந்த நிலையில், இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டபிறகு விரைவில் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT