தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,115 பேருக்கு தொற்று; மேலும் 41 பேர் பலி

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 2,115 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 2,115 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், தமிழகத்தில் இன்று புதிதாக 2,115 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 2,075 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 40.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,322 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய அறிவிப்பில் 41 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயத்தில், இன்று மொத்தம் 1,635 பேர் கரோனா தொற்றிலிருந்து  குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 30,276 பேர் குணமடைந்துள்ளனர். 

இன்று 27,537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 8,27,980 மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி 23,509 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT