சென்னை: கரோனா சிகிச்சை மையத்துக்காக மாணவர் விடுதிக்கு பதில் விளையாட்டரங்கத்தை வழங்கத் தயார் என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவா் விடுதிகளை வரும் 20-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியிருந்தது.
இதற்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, சென்னை மாநகராட்சிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கரோனா சிகிச்சைக்கு மாணவர் விடுதிக்குப் பதில் ஆடிட்டோரியம் மற்றும் 300 படுக்கை வசதி உள்ள மேலும் இரண்டு புதிய கட்டடங்களை சென்னை மாநகராட்சிக்குத் தரத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
மாணவர் விடுதியில், மாணவர்களின் உடமைகள் இருப்பதால், அதனை காலி செய்து கொடுப்பது சிரமம் என்பதால், விளையாட்டரங்கத்தை அளிக்கப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக கல்லூரிகள் உள்பட சில இடங்கள் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்க, பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவா் விடுதிகளில் கரோனா தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட உள்ளதால் விடுதிகளை காலி செய்து 20-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அந்தப் பல்கலைக்கழகத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் கடிதம் எழுதியிருந்த நிலையில், மாணவர் விடுதியை அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.