முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கரோனா; மேலும் 53 பேர் பலி

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,532 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:07 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,532 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 2,532 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 2,480 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 52.

இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,493 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்றைக்கு மட்டும் 31,401 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 8,92,612 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

இன்றைய அறிவிப்பில் 53 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது.  

அதேசமயம், இன்று மட்டும் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 32,754 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் 25,863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.