தமிழ்நாடு

ராஜஸ்தானில் இருந்து போலி இ-பாஸுடன் வந்த ஆம்னி பேருந்து பறிமுதல்

PTI

கோவை: ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன், போலி இ-பாஸ் வைத்துக் கொண்டு தமிழகம் வந்த ஆம்னி பேருந்து கோவை அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர் வைத்திருந்த இ-பாஸை, அதிகாரிகள் சோதித்த போது அது போலியானது என்று தெரிய வந்தது. காருக்காக வாங்கப்பட்ட இ-பாஸை முறைகேடாகப் பயன்படுத்தி, ஆம்னி பேருந்தில் ராஜஸ்தான் தொழிலாளர்கள் தமிழகம் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பேருந்தில் வந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், கோவை, பெருந்துறை, ஈரோடு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து, பொது முடக்கம் தொடங்கிய போது சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் என்பதும், தற்போது வேலை தேடி கோவைக்கு திரும்பியதாகவும் கூறுகிறார்கள்.

அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் பேருந்தின் ஓட்டுநர்கள் ஐந்து பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அங்குள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

SCROLL FOR NEXT