தமிழ்நாடு

பொது முடக்க விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.15.99 கோடி அபராதம் 

DIN


சென்னை: ஐந்தாவது பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் பொது முடக்க விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.15.99 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 -ஆம் தேதி முதல் பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை காவல்துறை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 6 லட்சத்து 96,583வழக்குகளைப் பதிவு செய்து 7 லட்சத்து 61,118பேரை காவல்துறை கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 5 லட்சத்து 71,492வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.15 கோடி 99 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் சில பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதால், காவல்துறையினரால் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT