முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீநிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் இதுவரை மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி வந்தார்.  கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசு எதிர்மனுதாரராக உள்ள வழக்குகளில் சென்னை உயரநீதிமன்றத்தில் ஜி.ராஜகோபால் ஆஜராகி வந்தார். 

இந்நிலையில், மூத்த வழக்குரைஞர் ஆர்.சங்கரநாராயணனை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்து மத்திய  அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆர்.சங்கரநாராயணன், இந்த பதவியில் நீடிப்பார் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →