தமிழ்நாடு

மதுரையில் ஒரே நாளில் 250 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 2,552

DIN

மதுரை மாவட்டத்தில் மேலும் 250 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கரோனா தீநுண்மி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமுடக்கம் தளர்வு செய்யப்பட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் வேகமெடுத்தது. இதையடுத்து மீண்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இதன் காரணமாக ஜூன் 24 முதல் 7 நாள்களுக்கு முழுமையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 250 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,552 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட 1,664 பேர் சிகிச்சையில் உள்ளனர். 609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT