முகப்பு
தமிழ்நாடு

ஜெயராஜ்-பென்னிக்ஸ்-க்கு உடற்தகுதிச் சான்று வழங்கிய மருத்துவர் 15 நாள் விடுப்பில் சென்றார்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ்-க்கு மருத்துவ தகுதிச்சான்று வழங்கிய மருத்துவர் திடீரென 15 நாள் விடுப்பில் சென்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
ஜெயராஜ்-பென்னிக்ஸ்
பகிர்:

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ்-க்கு உடற்தகுதிச்சான்று வழங்கிய மருத்துவர் திடீரென 15 நாள் விடுப்பில் சென்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் வெண்ணிலா என்பவர், ஜெயராஜ்- பென்னிக்ஸ் ஆகியோருக்கு மருத்துவ உடற்தகுதிச் சான்று அளித்ததன் அடிப்படையிலேயே காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் அவர் திடீரென 15 நாள் விடுப்பில் சென்றுள்ளார். சுகாதாரத்துறை இணை  இயக்குநர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். மருத்துவர் தொடர் விடுப்பில் சென்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய  தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →