சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் ஜூலை 5 வரை விலையில்லா உணவு வழங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  
தமிழ்நாடு

அம்மா உணவகங்களில் ஜூலை 5 வரை விலையில்லா உணவு: முதல்வர்

பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் ஜூலை 5 வரை விலையில்லா உணவு வழங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

DIN


பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் ஜூலை 5 வரை விலையில்லா உணவு வழங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை ஏளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் 30.6.2020 வரை வழங்கப்பட்டு வந்தது. சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு 19.6.2020 முதல் 30.6.2020 வரை அமல்படுத்தப்பட்டதால், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டிருந்தேன்.
 
மேற்கண்ட பகுதிகளில் 5.7.2020 வரை தீவிர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இக்காலக்கட்டத்தில், இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமையல் செய்து, இந்த உணவை, விலையில்லாமல், தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.  

இந்த நடைமுறை நாளை (1.7.2020) முதல் 5.7.2020 வரை செயல்பாட்டில் இருக்கும்." 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!

SCROLL FOR NEXT