முகப்பு
தமிழ்நாடு

கடலூருக்கு புதிய ஆட்சியர் நியமனம் 

கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக சந்திரசேகர் சஹாமுரி நியமிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 30 ஜூன், 2020 at 6:08 PM
புதிய ஆட்சியர் சந்திரசேகர்
பகிர்:

கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக சந்திரசேகர் சஹாமுரி நியமிக்கப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக தற்போது பதவி வகித்து வரும் வெ.அன்புச்செல்வன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். மாவட்ட ஆட்சியராக இருந்து பணி ஓய்வு பெறுவது என்பது அரிதான ஒரு நிகழ்வாகும். அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்து ஆட்சியராகவே பணி ஓய்வு பெற்ற முதல் அதிகாரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 

இவருக்குப் பதிலாக நில சீர்திருத்தங்கள் துறையின் இயக்குனர் சந்திரசேகர் சஹாமுரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2011-12 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வானவர். அரியலூர் சார் ஆட்சியராகப் பொறுப்பு வகித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.