முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மண்டலாபிஷேக  பூஜைகள் நிறைவு

தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டலாபிஷேக பூஜைகள் இன்று நிறைவடைந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:02 PM
பகிர்:

தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டலாபிஷேக பூஜைகள் இன்று நிறைவடைந்தன.

தஞ்சாவூர் பெரியகோயிலில் பிப்.5 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பிப். 6 ஆம் தேதி மண்டலாபிஷேகம் தொடங்கியது. தொடர்ந்து 24 நாள்களாக நடைபெற்று வந்த மண்டலாபிஷேக நிறைவு பூஜைகள் சனிக்கிழமை இரவு தொடங்கின. நடராஜர் சன்னதி அருகே அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தொடங்கிய முதல் கால யாக பூஜை பூர்ணாஹூதியுடன் முடிந்தது. 

இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மண்டலாபிஷேக நிறைவு பூஜைகளை முன்னிட்டு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →