தமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனை நிழல் குடையை ஆக்கிரமித்த குடிமகன்கள்: பயணிகள் அவதி

DIN

கோவை அரசு மருத்துவமனை முன் உள்ள நிழல் குடையைக் குடிமகன்கள் ஆக்கிரமித்து உள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவையில் உள்ள பிரதான சாலையான திருச்சி சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இதன் முன்பு பேருந்து நிறுத்தம் உள்ளது பேருந்து நிறுத்தத்தை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உள்பட நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் ரயில் நிலையம், உக்கடம், உட்பட மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் நிற்க கோவை மாநகராட்சி சார்பில் நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சமீப காலமாக கார், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் பார்க்கிங் செய்யும் இடமாக மாறியுள்ளது. மேலும் பயணிகளுக்காகப் போடப்பட்டுள்ள இருக்கையில் குடி மகன்களும் பிச்சைக்காரர்களும் ஆக்கிரமித்து உள்ளதால் பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் அமைந்துள்ள பகுதியில் மது அருந்தி, சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT