முகப்பு
தமிழ்நாடு

கோவை சுங்கம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 60 சவரன் நகை, 2 லட்சம் பணம் கொள்ளை

கோவை சுங்கம் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் ரொசாரியா. இவர் தனது மனைவி எலிசபெத் மேரி ஆகியோர் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

கோவை சுங்கம் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் ரொசாரியா. இவர் தனது மனைவி எலிசபெத் மேரி ஆகியோர் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டின் இரண்டாவது தளத்தில்  தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்து வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் 4 பேர், பிரான்சிஸ் ரொசாரியா  மற்றும் அவரது மனைவி எலிசபெத் மேரி ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி கயிற்றில் கட்டி விட்டு, வீட்டில் இருந்த சுமார் 60 சவரன் நகை மற்றும் 2  லட்சம் பணத்தை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பி சென்றனர். 

இதையடுத்து பிரான்சிஸ் ரொசாரியா  ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் நிபுணர்கள் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து முதியவர்களை கட்டி போட்டுவிட்டு கொள்ளையடித்து சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கு சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் அருகே உள்ள மற்ற சி.சி.டி.வி. கேமராக்கள் பதிவு குறித்தும் போலீசார் ஆய்வு செய்து

முழு கட்டுரையைப் படிக்க →