முகப்பு
தமிழ்நாடு

துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா? ராமதாஸ் கேள்வி

துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா? என பாமக நிறுவனர் ராமாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

Updated On : 5 மார்ச், 2020 at 1:41 PM
பாமக நிறுவனர் ராமதாஸ்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:35 PM

துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா? என பாமக நிறுவனர் ராமாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை ஆளுநர் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா?

சென்னை பல்கலைக்கழகத்திற்கு வெளிமாநிலத்தவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தேடல் குழு தலைவராக ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வெளிமாநில துணைவேந்தரை நியமித்ததால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழிவது போன்று சென்னை பல்கலை.யும் சீரழிந்து விடக்கூடாது! 

Advertisement

தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் படிப்படியாக வெளிமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது. இந்த அணுகுமுறையை பல்கலைக்கழக வேந்தர் கைவிட வேண்டும். தமிழக அரசு இதை அனுமதிக்கக்கூடாது! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.