முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் ஒரே நாளில் மேலும் ஒரு பெண்சிசுக் கொலையா? காவல்துறை விசாரணை

மதுரை உசிலம்பட்டியில் ஏற்கனவே எருக்கம்பால் ஊற்றி பெண் சிசுக் கொலைச் சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில் அதேப் பகுதியில் மற்றொரு பெண்சிசு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

மதுரை உசிலம்பட்டியில் ஏற்கனவே எருக்கம்பால் ஊற்றி பெண் சிசுக் கொலைச் சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில் அதேப் பகுதியில் மற்றொரு பெண்சிசு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவிலாங்குளம் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த பவித்ரா - ஜெயபாண்டி தம்பதிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

திடீரென பெண் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி, குழந்தையின் பெற்றோர் செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையைக் கொண்டு சென்றனர்.

ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த வாலாந்தூர் காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிறந்து 18 நாட்களே ஆன பெண்சிசு உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →