முகப்பு
தமிழ்நாடு

கர்நாடக விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

கர்நாடகத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

கர்நாடகத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10 பேர் காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயிலுக்குச் சென்றிருந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் அனைவரும் நள்ளிரவில் காரில் நள்ளிரவு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர். 

அப்போது அவர்கள் வந்த கார் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது. இந்த விபத்தில் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதில் தமிழக பக்தர்களின் காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது. அதில் பெங்களூரை சேர்ந்த 2 பேரும் பலியாகினர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து, சாலை விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 50,000 நிதியுதவி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →