மார்ச் 14ம் தேதி திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் படத் திறப்பு நிகழ்ச்சி
மார்ச் 14ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
சென்னை: மார்ச் 14ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அன்பழகனின் படத் திறப்பு நிகழ்ச்சி வரும் 14.3.2020 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இனமானப் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைப்பார்.
கழகப் பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்திட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ, எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எம்.பி., மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி., எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்.குமார், இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு.செல்லமுத்து, தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் பி.என்.அம்மாவாசி, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவர் க.முருகவேல்ராஜன், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.