தமிழ்நாடு

சரணாலயம் விரிவாகத்துக்கு மயான நிலத்தை கையகப்படுத்த முயற்சி: கிராம மக்கள் போராட்டம்

DIN

சரணாலயம் விரிவாகத்துக்கு மயான நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பறவைகள் சரணலாயத்தை சுற்றி சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சரணாலயம் அருகே சுமார் 100 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள மயானம் உள்ளது. இந்நிலையில் பறவைகள் சரணாலாயத்தை விரிவுபடுத்துவத்துவதற்காக அதிகாரிகள் மயான நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், அதனை தடுக்கும் விதமாக மயானத்தை சுற்றிலும் வேலி அமைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வேலியை அகற்ற வேண்டும் என பொதுமக்களை அதிகாரிகள் அச்சுறுத்துவதாக கூறி பறவைகள் சரணாலயத்திற்கு முன்பாக அப்பகுதி மக்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தங்களுக்கென உள்ள மயானத்தை, எந்தவித இடையூறுமின்றி தங்களுக்கே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT