தமிழ்நாடு

கேரளத்துக்குச் செல்வதை தமிழக மக்கள் தவிர்க்கலாம்: விஜயபாஸ்கர் அறிவுரை

DIN


சென்னை: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், கேரள மாநிலத்துக்குச் செல்வதை தமிழக மக்கள் தவிர்க்கலாம் என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கரோனா தொற்று குறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், முதியவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதுபோல, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கரோனா பாதித்த நாடுகளுக்கு செல்வது குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா பரவி வரும் கேரளத்துக்கு தமிழக மக்கள் செல்வதைத் தவிர்க்கலாம்.

அதே சமயம், கரோனா தொற்று குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். இதுவரை 1,46,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT