முகப்பு
தமிழ்நாடு

சி.ஏ.ஏ. குறித்து இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு நாளை ஆலோசனை

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசு இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

Updated On : 13 மார்ச், 2020 at 1:24 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:40 PM

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசு இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு குடியுரிமைச் சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

சென்னையில் தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு இந்த கூட்டமானது நடைபெற உள்ளது. தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேறக் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்கள் தங்களை கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும், இது தொடர்பான கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு தலைமைச் செயலாளர் பதில் அளிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.