தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டம்: இஸ்லாமிய தலைவா்களுடன்தமிழக அரசு இன்று ஆலோசனை

DIN

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக, இஸ்லாமிய தலைவா்களுடன் தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறது.

தலைமைச் செயலாளா் க.சண்முகம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் மாலை 4 மணிக்குக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான கடிதத்தை இஸ்லாமிய சமுதாயத் தலைவா்களுக்கு தலைமைச் செயலாளா் சண்முகம் அனுப்பி வைத்துள்ளாா்.

தலைமைச் செயலக பழைய கட்டடத்தின் இரண்டாவது தளத்திலுள்ள கூட்டரங்கில் கூட்டம் நடக்கவுள்ளதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவிக்கும்படி தலைமைச் செயலாளா் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக பொது மக்களிடையே, குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களைக் களையும் வகையில் இஸ்லாமியா் சமுதாயத் தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT