தமிழ்நாடு

மேம்பால தூணில் அரசுப் பேருந்து மோதி விபத்து: 2 பேர் படுகாயம்         

DIN

ஈரோட்டில் மேம்பால தூணில் அரசு பேருந்து மோதிய விபத்தில் நடத்துனர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு சூரம்பட்டிவலசுக்கு இன்று இரவு அரசு நகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சவிதா சிக்னல் பகுதியில் திரும்பியபோது,  இடது புறமாக மற்றொரு பேருத்து நின்று கொண்டிருந்தது. இதனால் ஓட்டுநர் செல்வன் பேருந்தை  வலது புறமாக ஓட்டிச்சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மேம்பாலத்தின் தூணின் மீது பேருந்து  மோதியது. இதில் பேருந்தின்  மேற்கூரை முழுவதும் சேதமடைந்தது. மேலும், முன்பக்க கண்ணாடியும், ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கியது. இந்த விபத்தில் பேருத்தில் இருந்த நடத்துனர் ரஞ்சித்குமார், பயணி அன்பரசு (18) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் சில பயணிகள் லேசான காயத்துடன் தப்பினார். 

விபத்து ஏற்பட்டதும், அக்கம் பக்கத்தனர் அங்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார், அன்பரசு ஆகியோரை மீட்டு அருகில் உள்ள  தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT