தமிழ்நாடு

கரோனா பாதிப்பா? திருவாரூர் அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதி

கரோனோ வைரஸ் சந்தேகத்தின்பேரில் இன்று ஒரே நாளில் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

DIN

கரோனா வைரஸ் சந்தேகத்தின்பேரில் இன்று ஒரே நாளில் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (37). அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 4 நாட்களுக்கு முன் தமிழகம் திரும்பினார். தொடர்ந்து, அவருக்கு சளித்தொல்லை காரணமாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு கரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக மேல் சிகிச்சைக்காக அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதேபோல தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த முருகையன் (45) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பி  உள்ளார். அவரும் தனக்கு கொரானா வைரஸ் இருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனோ வைரஸ் சந்தேகத்தின்பேரில் இன்று மட்டும் இரண்டு பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT