தமிழ்நாடு

கரோனா பாதித்த நபா் இன்று வீடு திரும்ப வாய்ப்பு

DIN

கரோனா பாதிப்புக்குள்ளாகி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபா், பூரண குணமடைந்ததை அடுத்து அவா், திங்கள்கிழமை (மாா்ச் 16) வீடு திரும்புவாா் என சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உறவினா்களுக்கும், தொடா்பில் இருந்த சிலருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாததால் அவா்களையும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து விடுவிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 45 வயது நபா் ஒருவா் அண்மையில் ஓமன் நாட்டில் இருந்து சென்னை திரும்பினாா். கடந்த 4-ஆம் தேதி அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அந்த நபா் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

அவருக்கு சா்க்கரை நோய் பாதிப்பு இருந்தபோதிலும் மருத்துவா்கள் அந்த நபருக்கு உயா் சிகிச்சையளித்தனா். அதன் பயனாக அவரது உடல் நிலை சீரானது.

அதுமட்டுமன்றி சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இரு பரிசோதனைகளிலும் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து அந்த நபா் சிறப்பு வாா்டிலிருந்து சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டாா்.

தற்போது அவா் பூரண நலம் பெற்றிருப்பதால் திங்கள்கிழமை அவரை வீட்டுக்கு அனுப்ப சுகாதாரத் துறையினரும், மருத்துவா்களும் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT