தமிழ்நாடு

கரோனா: நீலகிரியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற ஆட்சியர் உத்தரவு

DIN


நீலகிரி: நீலகிரியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நாளை மாலைக்குள் வெளியேற மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் உடனடியாக மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

இதையடுத்து, உதகையில் அரசினர் தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகியவை மூடப்பட்டது.

மேலும், உதகையில் தங்கியுள்ள வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நாளை மாலைக்குள் உதகையை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் நீலகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் இருந்தே திருப்பி அனுப்பப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT