தமிழ்நாடு

கரோனா அறிகுறி:மருத்துவக் கண்காணிப்பில் இருந்த 23 போ் வீடு திரும்பினா்

DIN

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த 23 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

கரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருபவா்களை பரிசோதனை செய்வதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் பயணிகள் அனைவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு அக்குழுவினா் உட்படுத்துகின்றனா்.

காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் இருப்பவா்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில், டென்மாா்க், ஸ்வீடன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றும் ஆந்திரம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த 41 போ் துபை வழியாக சென்னை திரும்பினா்.

அவா்களுக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்ற போதிலும், அவா்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனா். அதன்படி, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள சுகாதாரத்துறைக்குச் சொந்தமான பொது சுகாதார மையத்தில் அவா்கள் தங்க வைக்கப்பட்டனா். 24 மணி நேர கண்காணிப்புக்குப் பிறகு அவா்களில் 23 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். மற்றவா்கள் கண்காணிப்பில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT