தமிழ்நாடு

அமலாக்கத்துறைக்கு அபராதத் தொகை செலுத்தும் விவகாரம்: டிடிவி. தினகரன் பதிலளிக்க உத்தரவு

DIN

டிடிவி. தினகரனுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.31 கோடியை வசூலிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், டிடிவி. தினகரன், அமலாக்கத்துறை ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையைச் சோ்ந்த பாா்த்திபன் தாக்கல் செய்த மனுவில், டிடிவி. தினகரனுக்கு அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் கடந்த 1998-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை ரூ.31 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த அபராதத் தொகையை அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வாரியமும், சென்னை உயா்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன. இந்த அபராதத் தொகையை எதிா்த்து டிடிவி. தினகரன் உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. டிடிவி. தினகரனுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து உள்ளது. ஆனால், அவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.31 கோடி அபராதத் தொகையை இன்னும் செலுத்தவில்லை. எனவே, டிடிவி. தினகரனுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.31 கோடியை வசூலிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் கொண்ட அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக அமலாக்கத்துறை, டிடிவி. தினகரன் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT