புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு 
தமிழ்நாடு

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் இந்தியாவில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 

தொடர்ந்து கரோனா தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். புதுக்கோட்டையில் வடமாடு, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதியில்லை என்றும் தொடர்ந்து கரோனா தொற்றைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT