முகப்பு
தமிழ்நாடு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:13 PM
பாமக நிறுவனர் ராமதாஸ்
பகிர்:

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கரோனாவுக்கு 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இதுவரை 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதன் தாக்கம் உள்ளது. எனவே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகின்றன. 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டரில், கரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாணவர்கள் நலன் கருதி, இப்போது நடைபெற்று வரும் 11,12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27-ஆம் தேதி தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்! 

தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை கோடைக்காலம் வரை நீட்டித்து அடுத்த கல்வியாண்டில் திறக்க வேண்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →