முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

கரோனா வைரஸ் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:13 PM
பகிர்:

கரோனா வைரஸ் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கரோனாவுக்கு 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இதுவரை 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திலும் அதன் தாக்கம் உள்ளது. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி சிவகாசியைச் சேர்ந்த சங்கர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். 

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது போன்ற வழக்கு நிலுவையில் உள்ளது எனக் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →