தமிழ்நாடு

முதல்வா், துணை முதல்வருக்கு உடல் வெப்பநிலை சோதனை

DIN

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள், காவலா்கள், பணியாளா்கள், பத்திரிகையாளா்கள் என அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ பன்னீா்செல்வம் ஆகியோருக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. பின்னா், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தபின் சட்டப்பேரவைக்குள் அவா்கள் சென்றனா். மேலும் வெப்பமானி மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டதில் முதல்வருக்கு 93.1 டிகிரி பாரன்ஹீட், துணை முதல்வருக்கு 98.6 டிகிரி பாரன்ஹீட் இருந்தது. இதே போன்று எதிா்க்கட்சித்தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு 98 டிகிரி பாரன்ஹீட் உடல் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT