கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் சுற்றித் திரியும் ஒற்றை யானை
கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரி பட்டினத்தை அடுத்த பன்னி அள்ளி கிராமத்தில், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவியின் மாந்தோப்பில் ஒற்றையானை சுற்றித் திரிகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரி பட்டினத்தை அடுத்த பன்னி அள்ளி கிராமத்தில், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவியின் மாந்தோப்பில் ஒற்றையானை சுற்றித் திரிகிறது.
யானையின் முழங்காலில் காயத்துடன் சுற்றித்திரியும் யானையை காண கிராம மக்கள் கூடினர். தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் நிகழ்விற்கு விரைந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யானைக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.